Home > Uncategorized > வாழ்க்கை பயணம்

வாழ்க்கை பயணம்

என் இனிய நண்பா,

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஒணாண் பிடித்து
ஒடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
பல மாதம் போர்த்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறென் கணிப்பொறியொடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறென்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ?

மெளசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
தொலைந்து போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும் !
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும் !

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான்  வருமா?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி அமையுமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா !

வாழ்க்கை வசப்படும்…காத்திரு…


  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: